விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த திமுக சட்ட உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டு வருகிறார்கள். திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி அன்புமணி, நாம் தமிழர் சார்பாக டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றார். நேற்று முன்தினம் மாலை வரை பிரச்சாரம் விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இன்று காலை முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகள் இருக்கின்றது. இதில் 44 வாக்கு சாவடிகள் சற்று பதட்டமானவை. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வாக்காளர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை செல்போன் எடுத்துச் சென்றால் வீட்டிற்கு போய் அதை வைத்து விட்டு வரும்படி வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்க வருபவரிடம் செல்போன் இருக்கின்றதா என்பதை சோதித்த பிறகு தான் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சக்கர நாற்காலி, முதியவர்கள் வாக்களிக்க வசதியான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த பிறகு இதில் பதிவான வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…