Categories: Financelatest news

உஷார் மக்களே!..போலி செயலியின் மூலம் 8 லட்சத்தை இழந்த மனிதர்..தகவல்கள் உள்ளே..

இண்டெர்நெட் என்பது மனிதனின் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாததாக அமைந்துள்ளது. என்னதான் இண்டெர்நெட்டின் வளர்ச்சி மிக அதிக அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் சில தேவையில்லாத விஷயங்களும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. சமீப ஆண்டுகளாய் இண்டெர்நெட் மூலமாக மனிதர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் முக்கியமாக நமது வங்கி கணக்கின் மூலம் பலர் ஏமாறுகிறார்கள். இவர்களுக்காகவே ரிசர்வ் வங்கியானது அவ்வப்போது நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல செய்திகளை அறிவித்து கொண்டுதான் உள்ளது.

sbi yono app

இந்த நிலையில் தற்போது பிரபல வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் YONO என்ற செயலியை போன்று போலியான செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.8 லட்சத்தை சில கும்பல் ஏமாற்றியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற ஊரை சேர்ந்தவர் பவன் குமார் சோனி. 55 வயதான இவரின் மகன் டெல்லியில் உள்ள துவராக என்ற ஊரில் வசித்து வருகிறார். தனது தந்தை வங்கி கணக்கிற்கு தனது மகனின் மொபைல் எண்ணையே பதிவு செய்துள்ளார். ஏனென்றால் தனக்கு வரும் தகவல்கள் அனைத்தையும் தனது மகனே கையாள வேண்டும் எனும் எண்ணத்தில் அவ்வாறு செய்துள்ளார். ஒரு நாள் KYC-ஐ அப்டேட் செய்யுமாறு ஒரு தகவலும் அதில் ஒரு லிங்கும் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும் பொழுது அது எஸ்.பி.ஐ வங்கியின் YONO செயலியை பதிவிறக்கம் செய்துள்ளது.

sbi

உபயோகிப்பாளர் ஏற்கனவே அந்த செயலியை அவரது மொபைலில் வைத்துள்ளார். பின் இந்த போலியான செயலியிலும் தனது வங்கி பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார். சில நிமிடங்களுக்குள் அவரது கணக்கில் இருந்து பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இவர் கணக்கில் இருந்து  8 லட்சம் ரூபாய் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பின் இதனை பற்றி மாவட்ட சைபர் செல்லில் புகார் அளித்து பின் அவர்களின் உதவியோடு ரூ.6.24 லட்சம் பணம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை திரும்ப பெற முடியவில்லை.

cyber cell

எனவே இவ்வாறான பொய்யான தகவல்கள் மூலம் நாம் நமது பணத்தினை இழக்காமல் இருக்க ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். மேலும் நமது OTP எண்ணை எந்த காரணம் கொண்டும் யாருக்கும் தெரியப்படுத்த கூடாது

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago