இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய பியூஷ் சாவ்லா எதிர்பாரா சமயங்களில் விக்கெட் எடுத்து, போட்டியின் போக்கை மாற்றுவதில் பெயர்பெற்றவர்.
மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் சாவ்லா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரோகித் சர்மா கேப்டன் இல்லை என்று கூறினார்.
“நான் அவருடன் அதிகளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன், இதனால் எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் போட்டிக்கு, பிறகும் ஆலோசனையில் ஈடுபடுவது வழக்கம். ஒருநாள் நள்ளிரவு 2.30 மணிக்கு அவர் எனக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதன்பிறகு கையில் காகிதத்துடன் வந்தார். இருவரும் வார்னரை எப்படி அவுட் செய்வது என ஆலோசனை நடத்தினோம்.”
“அந்த நேரத்திலும், அவர் ஒரு வீரரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது பற்றி சிந்திக்கிறார். அதுதான் கேப்டன், அதன்பிறகு அவர் ஒரு தலைவர். அவர் கேப்டன் இல்லை, அவர் ஒரு தலைவர்.”
“2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை தொடர் என அவர் இரண்டிலும் அவர் விளையாடிய விதம். அவர் அடுத்து வரும் பேட்டர்களுக்கு ஒரு டோனை அமைத்துக் கொடுப்பார். அவர் உண்மையில் தலைவர். அவர் உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்,” என்று பியூஷ் சாவ்லா தெரிவித்தார்.
விராட் கோலியை தொடர்ந்து இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டனாக செயல்படுகிறார். இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா அந்த அணி ஐந்து முறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
அதிக கோப்பைகளை வென்று கொடுத்த நிலையிலும், மும்பை அணி நிர்வாகம் 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் ரோகித் சர்மாவை மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். மும்பை அணியின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…