காத்மண்டு திருபுவன் விமான நிலையத்திலிருந்து பரிசோதனைக்காக அதிகாரிகளுடன் கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சௌர்யா ஏர்லைன்ஸ் இருந்து இரண்டு விமான அதிகாரிகள், 17 டெக்னீசியன்கள் உடன் போக்காராவிற்கு பராமரிப்பு பணிக்காக சென்ற விமானம் கிளம்பும்போது ஓடுபாதையில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் விமானி காப்பாற்றப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
விமானம் புறப்படும் போது திடீரென ஏற்பட்ட கோளாறால் கிழக்கு பகுதியில் வெடித்து சிதறியது. இதில் உள்ளே இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது, 18 பேரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கிறது. நேபாளத்திற்குள் உள்நாட்டு விமானங்களை இயக்கி வரும் சௌர்யா ஏர்லைன்ஸ், இரண்டு பாம்பார்டியர் CRJ-200 ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை இரண்டும் ப்ளைட் ரேடாரின் 24ன் படி சுமார் 20 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.
நேபாளம் தன்னுடைய விமான போக்குவரத்து பாதுகாப்பில் கவனம் இல்லாமல் இருப்பதாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த வருடம் ஏடி ஏர்லைன்ஸில் விமானி கவனக்குறைவால் மின் இணைப்பை துண்டித்தது எடுத்து விபத்து ஏற்பட்டு 72 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் காத்மண்டும் மலைப்பகுதியில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 167 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…