Connect with us

Cricket

பிசிசிஐ வழங்கிய ரூ.125 கோடி பரிசுத்தொகை… யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Published

on

2007ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவிற்கு டி20 உலகக் கோப்பையை பெற்று தந்தது. இந்த வெற்றிக்காக பிசிசிஐ இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆண்டு ஐசிசி நடத்தும் உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியால் ஐசிசி கோப்பையை கைப்பற்றவே முடியவில்லை. இதனை தொடர்ந்து பல பைனலில் இந்திய களமிறங்கினாலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இந்த ஆண்டு விளையாடியது. எல்லா போட்டிகளிலும் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்திலும் தென்னாப்பிரிக்காவும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் பைனல் வந்தது. முதலில் ஆடிய இந்திய அணி தடுமாற்றத்துடன் ரன்களை சேர்த்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அடித்து ஆடியது. 30 பந்துக்கு 30 ரன்கள் என்ற எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடியது.

கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை சரியாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அதை தொடர்ந்து இந்திய எளிதாக உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றிக்கு பரிசாக பிசிசிஐ ரூ.125 கோடி அறிவித்தது.

அந்த பரிசில் இந்திய அணியின் 15 வீரர்களுக்கும் தலா ஐந்து கோடி ரூபாய் கொடுக்கப்பட இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ஐந்து கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் பவுலிங் பயிற்சியாளர் உள்ளிட்ட கோச் டீமுக்கு தலா 2.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

பிசியோதெரபிஸ்ட், த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்டவர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட இருக்கிறது. தேர்வாளர்கள் மற்றும் ரிசர்வ் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் கொடுக்கப்பட இருக்கிறது.

google news