இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும் கலாச்சாரமும் உருவாகி விட்டது. அதை விட அதிர்ச்சியாக சிறுவர்களும் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
அதோடு, பல குற்றச்செயல்களுக்கு இந்த மதுப்பழக்கமே முக்கிய காரணமாக இருக்கிறது. மது போதையில் கொலை என அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன், மது அருந்தும்போது நண்பர்களுக்குள் நடந்த தகராறு.. அதில் ஏற்பட்ட கொலை என செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான், சென்னைக்கு அருகே வாலிபர் ஒருவரை நண்பர்கள் மதுபோதையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வசித்து வந்தவர் விக்னேஷ். இவர் பெங்களூரில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டிலிருந்த படியே வேலை செய்து வந்தார்.
கடந்த 11ம் தேதி வெளியே போன விக்னேஷ் வீடு திரும்பவில்லை. எனவே, அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் நண்பர்களுடன் மது அருந்த போன போது அங்கு தகராறு ஏற்பட்டு விக்னேஷ் கொல்லப்பட்டது தெரியவந்திருக்கிறது.
கோவிந்தாபுரம் ஏரி அருகே 4 நண்பர்களுடன் மது அருந்தியபோது அதில் விசு என்கிற விஸ்வநாதனை விக்னேஷ் எட்டி உதைத்திருக்கிறார். இதில், கோபமடைந்த விசு வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து விக்னேஷை வெட்டி இருக்கிறார். இதில் அவர் உயிரிழந்திருக்கிறார். எனவே, அருகில் மண் தோண்டி அவரை அங்கேயே புதைத்துவிட்டு எல்லோரும் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் எல்லோரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…