latest news
மன்மதனாக வாழ்ந்து வந்த மாணவன்…மடக்கி பிடித்த போலீஸ்….
நாகரீக மாற்றத்தினை முன்னேற்றப் பாதைக்கு மட்டுமே பயன்படுத்தாமல், அதனை தப்பான வழியில் பயன்படுத்தி வழக்குகளில் சிக்கி நல்ல விதங்களில் அனுபவித்து வாழ வேண்டிய வாழ்க்கையை விதியே என நினைத்து நொந்து வாழ்ந்து முடிக்கும் அவலத்திற்கு எடுத்துச் செல்லும் பல விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது என்பது செய்திகளின் மூலமே உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி வாழ்க்கையில் எண்ணிலடங்கா இன்பங்களை மட்டுமே அனுபவித்து விட வேண்டும் என நினைத்து மாணவ – மாணவியர் தங்களை பல விதமான குற்றச்செயல்களுக்கு ஆட்படுத்தி இளம் வயதிலேயே தங்களது நல்வாழ்விற்கான இடைஞ்சல்களை அவர்களே உண்டாக்கியும் வருவதும் அறியப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தன்னை மன்மதனாக நினைத்துக் கொண்டு பல பெண்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீதர்ஷன் என்பவரும் அவருடன் அதே வகுப்பில் பயிலும் அதே வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்டங்களை வைத்து கொண்டு தொடர்ந்து அந்த மாணவியை மிரட்டி வந்திருக்கிறார் ஸ்ரீதர்ஷன்.
இவரது நடவடிக்கை பிடிக்காத அந்த மாணவி ஸ்ரீதர்ஷனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஸ்ரீதர்ஷன் அதே கல்லூரியில் படித்து வரும் வேறொரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.
மீண்டும் அதே போல இந்த மாணவியிடமும் தனிமையில் இருந்த போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து மாணவர் ஸ்ரீதர் மீது காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரினை அடுத்து மாணவர் ஸ்ரீதர்ஷனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதில் மாணவிகளுடன் தனிமையில் இருக்கும் படங்களை வைத்து பல மாணவிகளை இவர் மிரட்டி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.