Connect with us

latest news

வங்கி கணக்கில் பணம் எடுக்க சென்ற நபர் அதிரடி கைது… அப்படி என்னப்பா பண்ணாரு அவரு..?

Published

on

வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உலகில் பல நாடுகளில் கொள்ளையர்கள் கோடி கோடியாய் வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு வங்கியில் பணம் எடுக்க சென்ற நபரை எதற்காக கைது செய்தார்கள். முதலாளித்துவத்தின் மகுடமாக விளங்குவது அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு சென்ட், அதாவது இந்திய மதிப்பில் 25 பைசா காசுக்காக ஒருவர் சிறை சென்றுள்ளார்.

புளோரிடா மாகாணத்தின் சென்டர் கவுண்டி என்ற பகுதியில் உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ஒரு சென்ட் பணம் வேண்டும் என்று மைக்கேல் பிளமிங் என்ற நபர் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி கவுண்டரில் கொடுத்திருக்கின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி இவ்வளவு சிறிய தொகையை தர முடியாது என்று மறுத்து இருக்கின்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் பொறுமையை இழந்த மைக்கேல் தகாத வார்த்தைகளால் வங்கி ஊழியர்களை திட்டி இருக்கின்றார். மேலும் அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அதிகாரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அதிகாரிகளை திட்டியதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்கள். அதன் பெயரில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

google news