மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய பயிற்சி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீண்டும் தேர்வு எழுதுவதற்கும் யுபிஎஸ்சி ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பூஜா அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் தேர்வெழுதி இருக்கிறார். மேலும், தனது பெயர் மற்றும் பெற்றோர் பெயரை மாற்றி மோசடி செய்தும், சாதி சான்றிதழ் கோளாறு, மாற்றுத்திறனாளி என கொடுத்த சான்றிதழும் முறைகேடு செய்து இருக்கிறார்.
மேலும் பயிற்சி பணியின் போது தனக்கென தனி அலுவலகம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேட்டதும், அவருடைய காரில் சைரன் மாட்டியதும் மேலும் பிரச்னையாக வெடித்தது. இதை தொடர்ந்து யுபிஎஸ்சி ஆணையம் அவரை பணியில் இருந்து நீக்கி உடனே பயிற்சி மையத்துக்கு வர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநில அரசு அனுப்பிய விசாரணை அறிக்கையில் பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவரி இனி எதிர்காலத்தில் ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொள்ளாதபடி அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டெல்லி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் பூஜா கேட்கர் மொபைலை அனைத்து விட்டு தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கைக்கு பயந்து பூஜா துபாய் தப்பி சென்று இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் தரப்பில் பூஜாவிற்கு முன் ஜாமீன் கேட்டு டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள் பூஜா கேட்கர் மீது இருப்பது சீரியஸான வழக்கு. அதற்கு முன் ஜாமீன் தர முடியாது. அவருக்கு போலீஸ் காவல் தேவைப்படுகிறது. இந்த முறைகேட்டில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பதை பூஜா மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும். அதனால் அவரின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…