govt update news
மாதம்தோறும் ரூ. 20,000 தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம்… உடனே முதலீடு செய்யுங்கள்…!
60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து இதில் பார்ப்போம்.
தற்போது தபால் நிலையங்கள் சேமிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பலரும் சேமிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் எதிர்கால வாழ்விற்கு முதலீடு செய்வது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு சேமிக்க விரும்புபவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் பலத்திட்டங்களை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் உள்ள ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து தான் நாம் பார்க்கப் போகின்றோம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியான சிறந்த சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. ஓய்வு பெற்றவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களின் வழக்கமான வருமானத்தை பெறுவதற்கு சரியான வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
இதற்காக பணியில் இருக்கும் போதே திட்டமிட்டு டெபாசிட் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை தபால் நிலையம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தை முழுக்க முழுக்க அரசே செயல்படுத்தி வருகின்றது. சரியான ஓய்வூதியத்திற்காக திட்டமிட வேண்டியது என்பது மிக அவசியம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நாம் 20,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த வருமானம் நமக்கு கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்லாமல் வி ஆர் எஸ் எடுத்தவர்களும் இதில் டெபாசிட் செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் இந்த சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வட்டி கொடுக்கின்றது. 15 லட்சம் வரை டெபாசிட் செய்யும் ஒவ்வொருவரும் இந்த திட்டத்தின் மூலம் மாதம் 10 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமாக பெறலாம். அதிகபட்சமாக 30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
ஆண்டுக்கு நமக்கு 2, 46,000 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலமாக மாதம் தோறும் வருமானமாக 20,500 தொகையை வருமானமாக பெற முடியும். இந்த திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்வடையும். இதில் ஒரு முறை மட்டுமே பணத்தை முதலீடு செய்ய முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் மொத்த பணத்தையும் டெபாசிட் செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆயிரம் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டியை டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து பெற முடியும்.