உத்திரபிரதேசம் மாநிலத்தில் 500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்துப் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. லஞ்சம் கொடுத்தால் தான் சில விஷயங்களை செய்து கொடுக்கிறார்கள் என்கின்ற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். லஞ்சம் வாங்குபவர்களை அரசு சஸ்பெண்ட் செய்து தண்டனை கொடுத்து வந்தாலும் இன்னும் பலர் திருந்தாமல் தான் இருந்து வருகிறார்கள்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரூபாய் 500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஒரு நபரின் பாஸ்போர்ட்டை தபால்காரர் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்திருக்கின்றது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூபாய் 500 லஞ்சம் கேட்டிருக்கின்றார்.
இதனால் தபால் காரருக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்து இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்த புகாரின் பெயரை வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூபாய் 100 லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…