பத்திரிகையாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அதிபர் புடின் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிமுகப்படுத்தியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஜோபைடன் தீவிரமான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தாமாக முன்வந்து அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது.
ஏற்கனவே டிரம்ப் உடனான நேரடி விவாதத்தின்போது அவர் பேச வந்ததையே மறந்துவிட்டு பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்த விமர்சனத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நேட்டோ அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகப்படுத்தும்போது அதிபர் புடின் என்று அவர் குறிப்பிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
இதுமட்டும் போதாதென்று வெள்ளை மாளிகையில் தனியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் அவர் காமெடி செய்தார். துணை அதிபரான கமலா ஹாரிஸ் பற்றி குறிப்பிடும்போது, `துணை அதிபர் டிரம்ப்’ என்று குறிப்பிட்டார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே அவருக்கெதிரான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.
இதனால், தனக்கு எந்தவொரு குறைபாடும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஜோபைடன், அதை நிரூபிக்கும் வகையில் தேவைப்பட்டால் நரம்பியல்ரீதியான மருத்துவ பரிசோதனைக்கும் தான் தயார் என்று அறிவித்திருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…