நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனால் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றிருக்கிறார். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக.
கடந்த 10 வருடங்களில் பிரதமராக பதவியேற்றது முதலே தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்கிறார் மோடி. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்கான முயற்சியாகவே அது பார்க்கப்பட்டது. இப்போது 3வது முறையாக பதவியேற்றபின் முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றிருக்கிறார்.
இந்நிலையில், அவர் விரைவில் சென்னை வருவது தெரியவந்திருக்கிறது. வருகிற 20ம் தேதி அவர் சென்னை வருகிறார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லவுள்ள வந்தே பாரத் ரெயில் சேவையை துவங்கி வைக்கவே மோடி இங்கே வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் முடிந்தநிலையில், பிரதமராக பதவியேற்றுள்ள மோடி முதல் முறையாக சென்னை வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது எல்லா மாநிலங்களிலும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…