Categories: Cricketlatest news

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது.

இந்திய அணியின் முக்கிய வீரர் பிரித்வி ஷா. 2018 ஆம் ஆண்டு ராஜ்கோட் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலமாக கிரிக்கெட்டில் முதன்முதலாக அறிமுகமானார். துவக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த இவர் அடுத்த சேவாக்காக வலம் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அடுத்தடுத்து போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து பிரித்வி ஷா தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் இல் டெல்லி கேப்டன் அணிக்காக விளையாடிய இவர் உள்ளூர் தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். தற்போது ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் பரோடா அணிக்கு எதிராக இவர் வெறும் 7 மற்றும் 12 ரன்களையும், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 1 மற்றும் 39 என்ற மிக மோசமான ரன்களை பதிவு செய்தார்.

சில சமயங்களில் மட்டுமே அவர் அதிரடியாக விளையாடுகின்றார். பல நேரங்களில் மோசமாக விளையாடுவதால் அவரை பலரும் குறை கூறி வந்தார்கள். இப்படி ஒரு பக்கம் மோசமாக விளையாடும் நிலையில் மறுபக்கம் ஒதுங்கினமாகவும் மிகத் திமிராகவும் ந டந்து கொள்வதாக புகார் வரத் தொடங்கியது. பயிற்சிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டன் ரகானே, சர்துல் தாகூர் போன்ற வீரர்கள் சரியான நேரத்தில் வரும்போது பிரித்வி ஷா மட்டும் எப்போதும் தாமதமாகத்தான் வருகின்றார்.

இது குறித்து கேள்வி கேட்டால் திமிராக பதில் கூறுகிறார் என தகவல் வெளியானது. பிரித்வி ஷாவுக்கு உடல் எடையும் தற்போது அதிகரித்து இருப்பதால் பிட்னஸ்க்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மும்பை அணி அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு பிரித்வி ஷா தரப்பில் இருந்து எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் வழக்கமான பயிற்சியை கூட அவர் ஒழுங்காக செய்வதில்லை என்று புகார் எழுந்தது.

இந்நிலையில் மும்பை தேர்வு குழு பிரித்வி ஷா இனி உடல் எடையை குறைத்து முழு பிட்னஸ் எட்டினால் தான் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முடிவு செய்து ரஞ்சிக்கோப்பை அணையில் இருந்து தற்போது பிரித்வி ஷாவை விடுவிப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago