மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து இருக்கும் நிலையில், பாஜகவிற்கு தனிபெருமான்மை கிடைக்காமல் இருந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்து இருக்கிறது. அதே நேரத்தில், காங்கிரஸின் தொகுதிகளும் அதிகரித்து 99 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் கேரளாவின் வயநாடு மற்றும் உத்திர பிரதேச ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சட்டப்படி, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிடலாம். அப்படி இரண்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றாலும், ஒரு தொகுதியை மட்டுமே கையில் வைத்து கொள்ள முடியும். இன்னொரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே விதி. இந்நிலையில் நாளை அந்த முடிவை எடுக்க கடைசி நாள் என்பதால் இன்று காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாகவும், ரேபரேலி தொகுதியில் எம்பியாக நீடிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. எனவே ராகுல் காந்தி ராஜினாமா செய்த பின்னர் பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2019ல் இருந்து பிரியங்கா காந்தி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைதேர்தலில் முதல்முறையாக போட்டியிட இருப்பதால் காங்கிரஸுக்கு மிக பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இவிஎம் மெஷினை ஹேக் செய்ய முடியும்… எலான் மஸ்க் பற்ற வைத்த வெடி… அதிர்ச்சியான இந்தியா கூட்டணி..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…