latest news
அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு ஊதிய உயர்வு… முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு…!
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை 10,804 இல் இருந்து 16,796 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நடத்துனர்களின் மாத ஊதியத்தை 10,656-ல் இருந்து 16,585 ஆகவும் உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கின்றார். உயர்த்தப்பட்ட இந்த ஊதியத்திற்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, Dr.A.S.சிவக்குமாரிடம் இன்று வழங்கினார். இந்த ஊதிய உயர்வு ஜூன் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.