latest news
ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா…? அதிர்ச்சியில் மக்கள்…!
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் மாதம் ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கி வருகிறார்கள். மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து மிக மிக குறைந்த மானிய விலையில் தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வருகின்றது.
அதன்படி துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றது. சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு முதல் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றார்கள்.
அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு பாமாயில் கொள்முதல் செய்யவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 1800 கோடி கொடுத்து கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது அதன் மானிய தொகை 3800 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பு பாமாயில் ஆகிய இரண்டு பொருள்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது.