Connect with us

Cricket

என்ன விராட் இதெல்லாம்…கோலியை நோக்கி புறப்பட்டுள்ள கேள்வி?…

Published

on

Kohli

சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமான தங்களது அபிமானத்தை வைத்திருப்பது விராத் கோலி மீதும் கூட.  முடிந்து விட்டது என நினைத்து விட்ட எத்தனையோ போட்டிகளை தனது அசால்ட்டான பேட்டிங்கின் மூலம் இல்லை இன்னும் இருக்குறது என சொல்லவத்தவர். ஆனால் எதிர் நாடுகள் எதிர்பார்த்த தோல்வி என்பதாக இருந்திருக்காது போட்டியின் முடிவு. அந்த அளவு திறமையை தனக்குள்ளே கொண்டிருப்பவர் விராத் கோலி.

டி-20, 50 ஓவர்கள், டெஸ்ட் மேட்ச் என கிரிக்கெட்டின் அனைத்து வித ஃபார்மட்டிலும் ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்து அடுத்தடுத்து புதிய சாதனைகளை படைத்தவர் விராத் கோலி. 100 முறை கிரிக்கெட்டில் 100 ரன்களை அடித்திருந்தவர் சச்சின். யாராலேயும் இதனை முறியடிக்க முடியுமா? என்ற சந்தேகம் துவங்க ஆரம்பித்த நேரத்தில், அது நானாக கூட இருக்கலாம் என தனது விஸ்ரூப பேட்டிங்கை சர்வதேச களத்தில் காட்டி வருகிறார் விராத் கோலி.

விராத் கோலியின் சமீபத்திய பேட்டிங்கின் மீதான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆடிய விதம். இந்திய அணி திக்குமுக்காடி நின்ற போதெல்லாம், காப்பானாக களமிறங்கிய களத்தை கலக்கி வந்த கோலி ஏனோ இந்த தொடரில் தனது வழக்கத்தை கடைபிடிக்கத் தவறி விட்டாரோ?  என கேள்விகள் புறப்படத் துவங்கியுள்ளது.

எவராலும் எப்போதும் நிலையான ஒரு போக்கை தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது என்பதும் விளையாட்டு உலகத்தின் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.

Spin Bowling

Spin Bowling

எத்தனையோ பந்து வீச்சாளர்களுக்கு தலை வலியாக மாறிய கோலிக்கே, சமீப காலமாக இடது கை ஸ்பின்னர்கள் எமனாகவே மாறி வருகின்றனர்.   2021ம் ஆண்டு துவங்கி இப்போது வரையிலான போட்டிகளில் இடது கை ஸ்பின்னர்களால் அதிக முறை வீழ்த்தப்பட்டிருக்கிறார் கோலி.

ஜனவரி மாதம் 2021ம் ஆண்டு முதல் முடிவடைந்த 28 போட்டிகளில் 8 முறை தனது விக்கெட்டினை இடது கை ஸ்பின்னர்களிடம் பலிகொடுத்திருக்கிறார் கோலி. தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகராஜ், நியூஸிலாந்தின் மிட்செல் ஸாண்டனர், பங்களாதேஷின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் அஸ்டன் அகர் ஆகியோரால் விராத் கோலி வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

இந்த மோசமான சாதனைக்கு முற்றுப் புள்ளி வைப்பாரா?, வரும் காலங்களில் நடைபெறயிருக்கும் போட்டிகளில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை எந்த வித சிரமமுன்றி எதிர்கொள்வாரா? என்ற கேள்வி தான் இப்போது விராத் கோலிக்கு எதிரில் இருக்கும் முக்கியமான ஒன்றாக இருப்பதாக சொல்லப்படுகிறது கிரிக்கெட் விரும்பிகளால்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *