எஃப்.எம்.ஜி.இ எனப்படும் மருத்துவர்களுக்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள், விடையுடன் விற்பனைக்கு இருப்பதாக வெளியான சோசியல் மீடியா போஸ்ட் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பினைப் படிப்பதுண்டு. அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பும் மாணவர்கள், உள்நாட்டில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் எஃப்.எம்.ஜி.இ எனப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இந்தியாவில் மருத்துவராக அவர்கள், தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும். அப்படியான, இந்த முக்கியத் தேர்வு ஜூலை 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இந்தத் தேர்வின் வினாத்தாள், விடையுடன் தங்களிடம் விற்பனைக்கு உள்ளதாக ஒரு கும்பல் டெலிகிராம் குரூப்களில் சமீபத்தில் பதிவிட்டது.
இந்த விவகாரம் வெளியாகி கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேரள போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிந்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தேசிய தேர்வு முகமை நடத்திய நீட், நெட் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் வெளியாகி நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கேரளாவில் அம்பலமான இந்த முறைகேடும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…