இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 38 வயதான அஷ்வின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 113 ரன்களை விளாசியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகளை (Fifer) சாய்த்த வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்னேவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுநாள் (செப்டம்பர் 27) துவங்க இருக்கிறது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கிட்டத்தட்ட ஆறு உலக சாதனைகளை படைக்கும் நிலையில் உள்ளார். அந்த வகையில், இரண்டாவது மற்றும் ஒரே டெஸ்ட் போட்டியில் அஷ்வின் படைக்க வாய்ப்புள்ள ஆறு உலக சாதனைகள் என்னென்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்..
1- டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்காவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக அஷ்வின் உள்ளார். எனினும், நாளை முறுநாள் துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அஷ்வின் ஒரே விக்கெட் வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
2- இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க அஷ்வின் இன்னும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தால் போதுமானது. இந்த பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் 31 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னணியில் உள்ளார்.
3- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முன்னணி இடம்பிடிக்க அஷ்வின் இன்னும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க வேண்டும்.
4- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஷ்வின், ஷேன் வார்னே இரண்டாவது இடத்தில் உள்ளனர். அந்த வகையில், அஷ்வின் இன்னும் ஒருமுறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், இரண்டாவது இடத்தில் இருந்து முன்னேற முடியும்.
5- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைக்க அஷ்வின் இன்னும் எட்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க வேண்டும். தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், இந்திய வீரர் அஷ்வின் 180 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
6- உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேற அஷ்வின் இன்னும் ஒன்பது விக்கெட்டுகளை மட்டுமே எடுக்க வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…