Connect with us

Cricket

நான் மட்டும் என்ன ஒசத்தி… அந்த பரிசுத்தொகை எனக்கு வேணாம்… ராகுல் டிராவிட் அதிரடி!…

Published

on

இந்திய அணியின் டி20 ஐசிசி உலக கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக பிசிசிஐ வழங்கிய 125 கோடி ரூபாய் பரிசு தொகையில் தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை முன்னாள் முதன்மை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் வேண்டாம் எனக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி 2011 உலகக் கோப்பையை வென்றது. அதன் பின்னர், இந்திய அணிக்கு உலகக் கோப்பை கனவாகவே இருந்தது. தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த அணிக்கு ராகுல் டிராவிட்டின் வருகை பெரிய அளவில் தைரியத்தினை கொடுத்தது.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதி வரை சென்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் பைனலில் தோல்வியை தழுவியது. கிட்டத்தட்ட டிராவிட்டின் ஓய்வும் நெருங்கிய நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்று அவரை வெற்றியுடன் இந்திய அணி வழி அனுப்பியது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்தது. இதில் 15 வீரர்களுக்கு 5 கோடி விதம் பரிசுத்தொகை பிரிக்கப்பட்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை பயிற்சியாளரான ராகுல் டிராவிற்கும் 5 கோடி எனக் கூறப்பட்டது. ஆனால், பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பயிற்சியாளர்களுக்கு 2.5 கோடி ரூபாய் மட்டுமே பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் தனக்கு அதிகமாக கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளி ஐந்து கோடி ரூபாய் வேண்டாம் எனக் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மற்ற பயிற்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதே 2.5 கோடி ரூபாய் மட்டுமே போதும் என டிராவிட் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version