நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவாராகும் ராகுல் காந்தி, வகிக்கப்போகும் முதல் அரசியலமைப்புப் பதவி இதுதான்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி
கடந்தமுறை போல் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை, நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் களமாட ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி தேர்வு செய்திருக்கிறது. இதன்மூலம் வரும்காலங்களில் அரசியல் களம் மோடி Vs ராகுல் என்பதாகத்தான் இருக்கும்.
கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பொது கணக்குக் குழுக்களுக்கான தலைவராக எதிர்க்கட்சித் தலைவர்தான் இருப்பார். இதில், முறைகேடுகள் நடைபெற்றதாகத் தெரியவந்தால், எதிர்க்கட்சித் தலைவராக அதுகுறித்து விசாரணை நடத்தவும் அரசிடம் கோர முடியும்.
சிபிஐ, லோக்பால், விஜிலென்ஸ் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு சுயாதீன அமைப்புகளின் தலைமைப் பொறுப்புக்கு வருபவரைத் தேர்வு செய்யும் குழுவில் முக்கியமான உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார். பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்தக் குழுவில் இருப்பார்கள்.
இதையும் படிங்க: 35 கோடி பரிசு விழுந்ததால் அதிர்ச்சியில் மரணம்!. அதிர்ஷ்டம் அடிச்சும் அனுபவிக்க முடியாத சோகம்!..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…