govt update news
ரயிலில் இப்படி ஒரு விதிமுறை இருக்கா…? இத்தன நாள் இது தெரியாம போச்சே…!
ஒரு ரயில் டிக்கெட் எடுத்து நீங்கள் வேறு ஒரு ரயிலிலும் பயணிக்கலாம். இப்படி ஒரு வசதி குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் பொது போக்குவரத்து துறையில் முக்கிய இடத்தில் இருப்பது ரயில். ஒவ்வொரு தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். சிலர் நீண்ட தூர பயணத்திற்கும், சிலர் சில மணி பயணத்திற்கும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்வதால் நேரம் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகிறார்கள்.
அதிலும் ரயிலில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். ரயில் பயணம் செய்யக்கூடிய பெரும்பாலான மக்கள் தங்களது டிக்கெட் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்கிறார்கள். அவசர பயணத்திற்கு தட்கல் டிக்கெட் வசதியை பயன்படுத்துகிறார்கள். ரயில் நிலையங்களுக்கு நேரடியாக சென்று டிக்கெட் வாங்குபவர்களை விட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்வதால் இந்த வசதி அவர்களுக்கு மிக எளிமையாக கிடைக்கின்றது. ரயில்களில் பயணம் செய்பவர்கள் ரயில்வே தொடர்பான முக்கிய விதிமுறைகளை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சில விதிமுறைகள் பயணிகளுக்கு சலுகை வழங்குவதாக இருக்கும். சில விதிமுறைகள் பயணிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கும்.
ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில சமயம் ரயிலை தவிர விட்டால் அந்த டிக்கெட்டை பயன்படுத்தி வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? என்று கேட்டால் கட்டாயம் முடியும். ஆனால் இது பொது வகுப்பு டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
ஒரு சில காரணங்களினால் நீங்கள் உங்கள் ரயிலை தவற விட்டால் புது டிக்கெட்டை பயன்படுத்தி மற்றொரு ரயிலில் பயணம் செய்யலாம். முன்பதிவு பெட்டியில் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. ஒருவேளை நீங்கள் முன்பதிவு செய்து ரயிலை தவற விட்டிருந்தால் வேறு எந்த ரயிலிலும் பயணம் செய்ய முடியாது. ஆனால் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் நீங்கள் முன்பதிவு செய்து இருந்தால் அங்கு சென்று டிடிஆர் படிவத்தை நிரப்பி கொடுத்தால் உங்களது பணம் 60 நாட்களுக்குள் திரும்ப கிடைக்கும்.