Connect with us

latest news

மதியத்துக்குள்ள மழை பெய்யப்போகுதாமாம்…அலர்ட் கொடுத்துள்ள ஆய்வு மையம்….

Published

on

Rain

மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடிக்கடி கன மழை முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. மாநிலத்தின் பல இடங்களில் காற்றின் வேகம் அதிரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழை ஆனந்தத்தை தந்தாலும் இயல்பு வாழ்க்கையயும் லேசாக பாதித்தது. இதே போல கோவையில் ஒரு சில பகுதிகளில் அவ்வாப்போது லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது.

Rainfall

Rainfall

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. குற்றாலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கு காரணமாக அருகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டும் வந்தது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது கடந்த சில நாட்களாக வழக்கமாகி விட்டது. தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணிக்குள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி திருவள்ளுவர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டைவேலூர், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, தென் காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

google news