latest news
வானிலை மையம் கொடுத்துள்ள அறிவிப்பு…அடிச்சு பெய்ய போகுதா மழை?…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை எட்டு முற்பது மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிற ஒன்பதாம் தேதி வாக்கில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மணடலமக வலுப்பெறக்கூடும், இது அடுத்த மூன்று நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணித்துச் சொல்லியிருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கியுள்ளது.