Connect with us

latest news

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

Published

on

Rain

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும், வெயிலின தாக்கமும் இருந்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களைச் சேர்ந்த பொது மக்களும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வந்திருந்தனர். மழை பெய்யுமா?, வெப்பம் குறையுமா? குளிர்ச்சி பிறக்குமா? என்பது கூட பிரார்த்தனைகளாக இருக்கும் அளவிற்கு வெயில் விஷ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் தட்ப, வெப்ப நிலை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களுகளில் இன்று லேசானது முதல் வரையிலும் மிதமானது வரையிலான மற்றும் கனமழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தனது கணிப்பை சொல்லியிருக்கிறது.

Rainfall

Rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.அதே நேரத்தில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமைலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சொல்லியிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி முதல் 36 டிகிரியை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி முதல் 27 டிகிரி வரை இருக்கும் எனவும் தனது ஆய்வு அறிக்கை மூலமாக சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

google news