Categories: latest newstamilnadu

வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…

தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த இருபத்தி நான் கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

sankar sundar

Recent Posts

போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…

பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு மட்டுமே தான் செல்ல வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. ஏ.டி.எம்.கள் அறிமுகத்திற்கு பின்னர்…

11 mins ago

2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.  பாஜவின் ஒருங்கிணைப்பு …

1 hour ago

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர்…

2 hours ago

பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும்  இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம்…

4 hours ago

உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…

தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த…

5 hours ago

வேகம் முக்கியமில்ல பிகிலு…விவேகம் தான் முக்கியம்…தவெக தலைவர் விஜய் அறிவுரை…

தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என…

6 hours ago