Categories: latest newstamilnadu

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும், வெயிலின தாக்கமும் இருந்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களைச் சேர்ந்த பொது மக்களும் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகி வந்திருந்தனர். மழை பெய்யுமா?, வெப்பம் குறையுமா? குளிர்ச்சி பிறக்குமா? என்பது கூட பிரார்த்தனைகளாக இருக்கும் அளவிற்கு வெயில் விஷ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் தட்ப, வெப்ப நிலை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களுகளில் இன்று லேசானது முதல் வரையிலும் மிதமானது வரையிலான மற்றும் கனமழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தனது கணிப்பை சொல்லியிருக்கிறது.

Rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.அதே நேரத்தில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமைலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சொல்லியிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி முதல் 36 டிகிரியை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 26 டிகிரி முதல் 27 டிகிரி வரை இருக்கும் எனவும் தனது ஆய்வு அறிக்கை மூலமாக சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்

sankar sundar

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

2 hours ago