Connect with us

latest news

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில்… காலை 10 மணி வரை… மழை அடிச்சு வெளுக்க போகுது…!

Published

on

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இரவு முழுவதும் சென்னையில் பல இடங்களில் பெய்த மழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 15 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது. அதைத்தொடர்ந்து சென்னை வர வேண்டிய நான்கு விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

google news