ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டும் அதிகம் அறியப்பட்டவர். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதோடு மட்டுமல்லாமல் படமும் இயக்கியிருக்கிறார். ரஜினி நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் ஒன்றில் ரஜினிக்கு டூப்-பாக ரமேஷ் கண்ணாவே நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் “படையப்பா”, அஜீத்குமாருடன் “வரலாறு”, “வில்லன்”, விஜயுடன் “ஃப்ரண்ட்ஸ்” இப்படி பல படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரமேஷ் கண்ணா. அஜீத், தேவயானி, ஹீரா நடித்து வெளியான “தொடரும்” படத்தின் இயக்குனரும் இவரே.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து ஜப்பான் நாட்டில் ரிலீஸாகி அங்கு மட்டுமல்லாமல் வெளியான எல்லா இடங்களிலேயும் சக்கை போடு போட்ட படம் “முத்து”. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.
அதில் ஃப்ளாஷ்பேக்கில் ஜமீன்தார் கேரக்டரிலும், அதன் தொடர்ச்சியாக வயதான கோலம் ஏற்றும் நடித்திருந்திருப்பார் ரஜினி.
அந்த ரஜினி குதிரை வண்டியில் வருவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது லாங் – ஷாட்டில் சூட் செய்யப்பட்ட நேரத்த்தில் கோட் அணிந்து குதிரை வண்டியில் ரஜினியின் டூப் – பாக வந்திருப்பவர் ரமேஷ் கண்ணா. அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் ரஜினியை வைத்து க்ளோசப் ஷாட்களை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார்.
டூப் ரமேஷ் கண்ணா ரஜினிகாக தயாராக வைக்கப்பட்டிருந்த கோட்டை போட்டு நடித்திருக்கிறார், ஷூட்டிங் ஸ்பாட்டில் வேறு கோட்டு கை வசம் இல்லாமல் இருந்திருக்கிறது. டூப் மட்டுமல்லாமல் அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் இருந்த ரமேஷ் கண்ணா நிலைமையை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் தவித்து வந்திருக்கிறார்.
இது பற்றி கேட்டறிந்த ரஜினி, டூப் ரமேஷ் கண்ணா போட்டு நடித்த அதே கோட்டினை வாங்கி அணிந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் அந்தக் காட்சியில். வியர்வை நாற்றமும், ஈரமுமாக இருந்த அந்த கோட்டை ரஜினி பெருந்தன்மையுடன் போட்டு நடித்திருந்த சம்பவத்தினை தனது வாழ் நாளில் மறக்க முடியாது என சொல்லியிருந்தார் ரமேஷ் கண்ணா தனது பேட்டியின் போது ஒரு முறை.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…