Categories: indialatest news

வாரி கொடுத்த வள்ளல்… ரத்தன் டாட்டாவின் பிறப்பு முதல் இறப்பு வரை… வாழ்க்கை வரலாறு இதோ…!

இந்தியாவிலேயே மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக வளர்ந்து வந்தவர் ரத்தன் டாடா. அவர் இன்று காலமானார். இந்த செய்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு அவர் மரணமடைந்தார்.  வயது முதிர்ச்சி காரணமாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற அவர் திடீரென்று உயிரிழந்தார்.

86 வயதாகும் ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவர். அவரது சேவை, பணி மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக பலராலும் அறியப்பட்டவர். மிகவும் சேவை மனப்பாங்கு கொண்ட இவரை பிடிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை கட்டி வளர்த்துள்ளார். 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பாரசி ஜோராஸ்ட்ரியன் குடும்பத்தில் பிறந்தவர்.

சூரத்தில் பிறந்த இவர் டாடா குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட நோவல் டாடா மற்றும் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் மருமகள் சூனி கமிசாரியட்டின் டாடா ஆகியோரின் மகனாவார். ரத்தன் டாடாவுக்கு 10 வயது இருக்கும் போது அவரது தாய் தந்தை இருவரும் அவரை விட்டு பிரிந்து விட்டனர். இவர் மும்பை ககதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, மும்பை, பிஷப் காட்டன் பள்ளி, சிம்லா, மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளி ஆகியவற்றில் கேம்பியன் பள்ளியில் பயின்றவர்.

அவர் ஹார்வர்டு பிசினஸ் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். ஜேஆர்டி டாடா 1991 டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய போது ரத்தன் டாடா தலைவராக நியமித்த அப்போது பல தசாப்தங்களாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த பல தலைவர்களும் அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதை கடுமையாக எதிர்த்தனர். அவரது தலைமையின் கீழ் டாடா சன்ஸ் நிறுவனங்களின் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த நிறுவனங்களாக நெறிப்படுத்தப்பட்டது.

அவரது 21 ஆண்டுகால பொறுப்பில் வருவாய் 40 மடங்குக்கும் லாபம் 50 மடங்கும் அதிகமாக இருந்தது. டெட்லியை வாங்க அவர் டாட்டா டீயையும், ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்குவதற்கு டாடா மோட்டார்ஸ்யும், கோரஸை வாங்க டாட்டா ஸ்டீலையும் நிறுவினார். இந்த நிறுவனத்தை இந்தியாவை மையமாகக் கொண்டு உலகளாவிய வணிகமாக மாற்றினார். அதேபோல் டாடா நானோ காரையும் அவர் உருவாக்கியிருந்தார்.

இது மலிவு விலையில் அனைவரும் வாங்கக்கூடிய காராக உருவானது. தொடர்ந்து 75 வயதை எட்டிய பிறகு டாட்டா 28 டிசம்பர் 2012 அன்று டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். சைரஸ் மிஸ்டரி அவரது வாரிசாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் இயக்குனர்கள் குழு மற்றும் சட்டப்பிரிவு படி 24 அக்டோபர் 2016 அன்று அவரை நீக்குவதற்கு வாக்களிக்கப்பட்டது. இதன்பின் குழுவின் இடைக்காலத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

ரத்தன் டாடாவின் வாரிசைக் கண்டறிய ரத்தன் டாடா, டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், பெயின் கேபிட்டலின் அமித் சந்திரா, முன்னாள் தூதர் ரோனென் சென், லார்ட் குமார் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. 12 ஜனவரி 2017 அன்று நடராஜன் சந்திரசேகனை இந்த குழு நியமித்தது சேமிப்பு அனைத்தையும் பல வெர்சினஸில் முதலீடு செய்திருக்கின்றார்.

இவர் அது மட்டும் இல்லாமல் கல்வி மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் ஆதரவாளராக பல உதவிகளை செய்து இருக்கின்றார். டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையானது 28 மில்லியன் டாட்டா ஸ்காலர்ஷிப் நிதியை வழங்கியுள்ளது. இது இந்தியாவில் இருந்து இளங்கலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க கார்னல் பல்கலைக்கழகத்தை அனுமதிக்கும்.

டாட்டா குழும நிறுவனங்களும் டாடா தொண்டு நிறுவனங்களும் 2010ல் 50 பில்லியனை ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலுக்கு நிர்வாக மையத்தின் கட்டுமானத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். டாடாவின் குடும்பத்தை பொறுத்தவரை நான்கு முறை இவர் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் பயத்திலும் சில காரணத்திற்காகவும் பின்வாங்கி விட்டதாக ஒரு முறை கூறியிருந்தார்.

அவர் ஒருமுறை லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரியும் போது ஒரு பெண்ணை காதலித்தார். அப்போது இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா சீனா போர் காரணமாக அந்த பெண்ணின் பெற்றோர் அவரை டாடாவுடன் இந்தியா செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் டாடா தனது இறுதி காலம் வரை திருமணம் ஆகாமலேயே இருந்து விட்டார். இன்று இவரின் உடல் 21 குண்டுகள் முடங்க அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

54 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

1 hour ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

2 hours ago