Categories: Cricketlatest news

கங்குலி தொடங்கி யுவராஜ் சிங் வரை… ரத்தன் டாடா உதவிய கிரிக்கெட் வீரர்கள்… இதோ பட்டியல்…!

மறைந்த ரத்தன் டாடாவால் பயன் பெற்ற கிரிக்கெட் வீரர்களின் விவரங்களை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

மிகப்பெரிய தொழிலதிபரும், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தனது 86 வயதில் காலமானார். கடந்த புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்த ரத்தன் டாட்டா உடல் நேற்று 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய வணிக உலகில் ரத்தன் டாடாவை போல மதிக்கப்படும் நபர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

வணிகத்தில் அதிபராக பல சாதனைகள் புரிந்த ரத்தன் டாடா இந்தியாவின் பொருளாதார வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கை கொடுத்தவர். அவரது பணி மற்றும் அவர் மற்றவரை அணுகக்கூடிய விதம் அவரை உலக அளவில் மிகப்பெரிய வணிக தலைவர்களில் ஒருவராக மாற்றியது. இந்நிலையில் ரத்தன் டாடா விளையாட்டு மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர். அதிலும் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் உடையவர்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த அவர் இந்திய கிரிக்கெட் மற்றும் அதன் வீரர்களின் வளர்ச்சிக்கு பங்காற்றி இருக்கின்றார். நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் டாடா குழுமம் வழங்கிய ஆதரவை தங்கள் வெற்றியின் ஒரு பகுதியை காரணம் என்று கூறுவார்கள். பல ஆண்டுகளாக ரத்தன் டாட்டா குழுமத்தின் கொடையின் கீழ் பல நிறுவனங்களை மேற்பார்வையிட்டார்.

இந்த நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் நிதி உதவி மற்றும் விளையாட்டு மற்றும் தொழில் வாழ்க்கையை வழங்குவதற்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றது. விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் டாடா குழுமத்தில் அர்ப்பணிப்பால் பல தலைமுறை வீரர்கள் பயனடைந்து இருக்கிறார்கள். அதிலும் பல கிரிக்கெட் வீரர்கள் டாடா குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார்கள்.

இதில் மொஹிந்தர் அமர்நாத், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ராபின் உத்தப்பா மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் போன்ற புகழ்பெற்ற வீரர்களின் வாழ்க்கையில் ஏர் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. டாட்டா குழுமத்துடன் இணைந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஜவகர் ஸ்ரீநாத், யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் மற்றும் முகமது கைஃப் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கு ஏவுதளமாக இருந்தது.

கூடுதலாக அஜித் அகர்கர் மற்றும் ருசி சுருதி போன்ற கிரிக்கெட் வீரர்கள் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள். சமீபகாலமாக ஷர்துல் தாக்கூர் மற்றும் ஜெயந்த் யாதவ் போன்ற விளையாட்டு வீரர்கள் டாட்டா குழுமத்தின் கிரிக்கெட்கான நீண்ட கால ஆதரவால் பயன் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Sri

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

4 mins ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago