டாட்டா குழுமத்தை உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக மாற்றிய பெருமை எப்போதும் ரத்தன் டாடாவுக்கு சேரும். இவர் தனது 86 வயதில் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். இவரின் மறைவு நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நேற்று 21 குண்டுகள் முழங்க ரத்தன் டாடா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது விடாமுயற்சி காரணமாக ரத்தன் டாடா இந்தியாவில் வெற்றிகரமாக முதல் கார் நிறுவனத்தை உருவாக்கியது.
அது மட்டுமில்லாமல் புகழ்பெற்ற பிரிட்டிஷ்கர் பிராண்டையும் விலைக்கு வாங்கினார். டாடா மோட்டார்ஸ் பிரிவில் உள்ள ஜாகுவார் லேண்ட்ரோ வரை ரத்தன் டாடா வாங்கிய சம்பவத்திற்கு பின் நடந்த ஒரு சுவாரஸ்ய கதையை தான் இதில் நாம் பார்க்க போகிறோம். 1998 ஆம் ஆண்டு ரத்தன் டாட்டா தனது கனவு திட்டமான டாடா இண்டிகா கார் மாடல் அறிமுகம் செய்தது டீசல் இன்ஜினுடன் கூடிய நாட்டின் முதல் ஹாட்ச்பேக் மாடலாகும்.
இதன் விற்பனை குறைவாக இருந்ததால் டாடா மோட்டார்ஸை அமெரிக்கா ஆட்டோ நிறுவனமான ஃபோர்டுக்கு விற்பதற்கு முடிவு செய்தார்கள். 1999இல் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் மும்பை வந்து டாடா குழுமத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் டெட்ராயிடில் அந்த நிறுவனத்தின் தலைவர் பில் போர்டை ரத்தன் டாடா சந்தித்தார்.
3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் பில் போர்ட் மிக தரக்குறைவாக பேசி ரத்தன் டாடாவை அவமானப்படுத்தினார். பயணிகள் வாகன பிரிவு பற்றி எதுவுமே தெரியாத ரத்தன் டாடாவிடம் ஏன் இந்த தொழிலை தொடங்கினார்கள் என்று கேட்டதாக செய்தி வெளியானது. உங்களுக்கு எதுவும் தெரியாது, நீங்கள் ஏன் பயணிகள் கார் பிரிவை தொடங்கியுள்ளீர்கள் என்று போர்ட் அதிகாரிகள் டாடாவிடம் கூறினார்கள்.
மேலும் பிந்தைய வணிகத்தை வாங்குவதன் மூலம் இந்திய நிறுவனத்திற்கு உதவி செய்வது பற்றி பேசி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து போர்ட் மற்றும் டாடாவுக்கு இடையிலான ஒப்பந்தம் நடைபெறவில்லை அதன் பிறகு இந்தியா திரும்பிய டாடா தனது கார் வியாபாரத்தை விற்பதில்லை என்று முடிவு செய்தார். அதிலிருந்து சரியாக 9 ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு போர்ட் நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக உருவெடுத்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போர்ட் நிறுவனத்தின் ஜாகுவார் மற்றும் லேன்ரோவர் பிராண்டுகளை விலைக்கு வாங்க முன் வந்தது. இந்த ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் கையெழுத்திடப்பட்டது. 2 நிறுவனங்களுக்கு இடையே 2.3 பில்லியன் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த சமயத்தில் போர்ட் தலைவர் பில் போர்டு ரத்தன் டாடாவுக்கு நன்றி தெரிவித்தார். ‘ஜாகுவார் லேண்ட்ரோவர் வாங்கியதன் மூலம் நீங்கள் எங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்துள்ளீர்கள்’ என்று அவர் தெரிவித்திருந்தார். தன்னை இழிவு படுத்தியவர்களை கூட கைவிடாமல் அவர்களுக்கு உதவிய பெருமை எப்போதும் ரத்தன் டாடாவையே சேரும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…