ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்… இத மட்டும் வேகமா செஞ்சிடுங்க… கடைசி நாள் எப்போது…?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை அப்டேட் செய்வதற்கான கடைசி நாள் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு மக்களுக்கும் அரசு தரப்பில் இருந்து ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு குடும்ப அட்டையாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றது. இந்த ரேஷன் கார்டு மூலமாக அரசிடம் இருந்து மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை நாம் வாங்கிக் கொள்ளலாம்.

அது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பு செய்து கொள்வது என்பது மிக அவசியம். அப்படி செய்ய விட்டால் ரேஷன் பொருள்கள் கிடைக்காது. கேஒய்சி சரிபார்ப்பு என்பது ஆதார் கார்டு மற்றும் மொபைல் நம்பர் சார்ந்த அடையாள சரிபார்ப்பு. அதை செய்வதன் என்பது மிகவும் எளிமையானது.

இப்படி செய்வதால் மோசடிகளை தடுக்க முடியும் என்று அரசு இதனை கட்டாயமாக்கி இருக்கின்றது. ரேஷன் கார்டு மூலம் இலவச ரேஷன் பெரும் வசதியை நீங்கள் பெற்றிருந்தாலும் ரேஷன் கார்டுக்கான கேஒய்சி இன்னும் முடிக்காமல் இருந்தால் விரைவில் செய்து முடிக்க வேண்டும். ரேஷன் விதிகளின்படி குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கேஒய்சி சரிபார்ப்பு செய்வது என்பது மிக அவசியமாகும்.

இதற்கு அனைத்து உறுப்பினர்களின் கைரேகை பதிவு வழங்கப்பட வேண்டும். ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கேஒய்சி சரிபார்ப்பு செய்வது என்பது மிக அவசியம். ரேஷன் காரில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்படவில்லை என்றால் அவர்களின் பெயர் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்படும். ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பு செய்வதற்கான கால அவகாசமும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டின் கேஒய்சி வசதி முற்றிலும் இலவசம் தான். இதற்காக நீங்கள் எங்கும் அழைய வேண்டியது இல்லை.

ரேஷன் எங்கிருந்து கிடைக்கின்றதோ அந்த ரேஷன் கடைக்கே செல்ல வேண்டும். அங்கு வைத்து கேஒய்சி சரிபார்ப்பு செய்து கொள்ள முடியும். கடைக்காரர் பிஓஎஸ் இயந்திரத்தில் இருந்து உங்களுடைய கைரேகை பதிவை எடுத்து கேஒய்சி சரிபார்ப்பை முடித்துக் கொடுப்பார். கருவிழி ரேகை மூலமாகவும் கேஒய்சி சரிபார்ப்பு செய்து முடிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பெற இந்த காலக்கெடுவுக்குள் அப்டேட்டை முடிக்க வேண்டும் இல்லையென்றால் ரேஷன் வாங்க முடியாது. ரேஷன் கார்டு நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago