Connect with us

govt update news

ரேஷன் கார்டில் இத செய்யலனா எதுவும் வாங்க முடியாது… ரத்து செய்ய உத்தரவு… கடைசி வாய்ப்பு…!

Published

on

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு என்பது ஒவ்வொரு குடி மக்களின் முக்கிய ஆதாரமாக பார்க்கப்பட்டு வருகின்றது. அரசு தரப்பில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக மலிவான விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் ஏழை மக்களுக்கானது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை மட்டும் இல்லாமல் அரசு தரப்பில் இருந்து நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டுக்கு இ-கேஒய்சி செய்வதை அரசு தற்போது கட்டாயமாக்கி இருக்கின்றது.

நீங்கள் இன்னும் உங்கள் ரேஷன் கார்டில் கேஒய்சி-யை முடிக்கவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு உங்களுக்கு பயனளிக்காது. அதேபோல ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும். எனவே உடனடியாக இந்த அப்டேட்டை செய்து முடிப்பது மிகவும் நல்லது. ரேஷன் கார்டில் கேஒய்சி சரி பார்த்து முடிப்பதற்கான கடைசி தேதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு ஏற்றபடி மாறுபடுகின்றது.

எனவே உங்கள் மாநிலத்தின் இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் கடைசி தேதியை சரி பார்த்து சரியான நேரத்தில் கேஒய்சி சரி பார்ப்பை முடிப்பதில் மிகவும் நல்லது. இந்த அப்டேட்டை முடிக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதன் பிறகு உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. கார்டில் பெயர் உள்ளவர்களின் விவரங்கள் சரியாக இருக்கும் வகையில் கேஒய்சி செய்து கொள்ளுமாறு ரேஷன் கார்டு காரர்களுக்கு உணவுத்துறை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது.

யாருடைய பெயரையாவது நீக்க வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும் என்றால், கேஒய்சி மூலம் மட்டும் செய்ய முடியும். திருமணம் முடிந்தவர்கள் அல்லது இறந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரேஷன் கார்டு தனியாக வழங்கப்படுகின்றது. நீங்கள் வீட்டில் இருந்தே உங்கள் மாநிலத்தின் உணவுத்துறை மற்றும் ரேஷன் கார்டு சேவையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும் கேஒய்சி-கான இணைப்பை அங்கே காண முடியும்.

உங்கள் ரேஷன் கார்டு எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை நீங்கள் இணையதளத்தில் உள்ளிட வேண்டும். பிறகு ஆதார் எண்ணை உள்ளிட்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இரண்டிலும் உங்கள் பெயர் மற்றும் தகவல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

ஆதாருடன் இணைத்து பிறகு நீங்கள் கைரேகை அல்லது ஓடிபி சரிபார்ப்பை செய்ய வேண்டும். இதன் பிறகு கேஒய்சி சரிபார்ப்பு முடிவு பெற்று விடும். ஆன்லைனில் செய்ய முடியாவிட்டால் அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது பொது சேவை மையத்திற்கு சென்று கேஒய்சி பார்க்க முடியும். அங்கு உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை கொடுத்து இந்த அப்டேட்டை செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்ய முடியாமல் போனால் ரேஷன் கார்ட் இல்லாமல் போய்விடும் உடனடியாக இதை செய்வது நல்லது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *