மது அருந்திவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் என சிலர் சொல்வார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதேநேரம், மிகவும் அதிகமான மது அருந்திவிட்டு தூங்கும்போது தனக்கு என்ன நடக்கிறது என்பதையே உணரமுடியாது என்பதை தெரியப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஷ்யாவை சேந்தவர் மரினா. இவரின் வயது 60. பல வருடங்களுக்கு முன்பே இவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சகோதரர்கள் யாருடனும் பேசுவதில்லை. அவர்கள் யாருடனும் இவருக்கு எந்த உறவும் இல்லை. இவருக்கென ஒரு வீடு இல்லை. எந்த அடையாள அட்டையும் இல்லை. எனவே, ஆதரவற்றவர்கள் தங்கி இருக்கும் ஒரு இடத்தில் தங்கி இருந்தார்.
சமீபத்தில் நிறைய மது அருந்திவிட்டு ஒரு ஆட்டு கொட்டகையில் தூங்கி இருக்கிறார். காலையில் எழுந்து பார்த்தால் அவருக்கு 2 கால்களில் பாதி இல்லை. எலிகள் அவரின் காலை தின்று தீர்த்துவிட்டதை புரிந்துகொண்டார். மிகவும் மோசமான நிலையில் இருந்த அவரை பார்த்து ஒருவர் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு செல்லும் முன்பே இவரின் கால்கள் அழுகி இருந்ததால் இரண்டு கால்களையுமே மருத்துவர்கள் வெட்டிவிட்டனர். ஏற்கனவே தங்கி இருந்த இடத்தில் இவரை விட்டுவிட்டனர். ‘இவரை பற்றி அவரின் குடும்பத்தினர் கூட விசாரிப்பது இல்லை. அவரின் சகோதரரை தொடர்பு கொண்டு பேசினால் ‘அவருடன் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரை பற்றி என்னிடம் எதுவும் பேசவேண்டாம். அவரை பற்றி பேச என்னை அழைக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார்’ என அந்த விடுதியின் இயக்குனர் சொல்கிறார்.
இப்போதும் ‘மரினா குடிக்கிறாயா?’ எனக்கேட்டால் ‘உடனே கொண்டு வாருங்கள்’ என சொல்கிறார். சிகரெட் பழக்கமும் இருக்கிறது என நொந்து கொள்கிறார் அந்த விடுதி இயக்குனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…