Connect with us

Cricket

எதையாச்சு பேசிட்டு இருக்காதீங்க.. தோல்விக்கு இதுதான் காரணம்.. ஜடேஜா!

Published

on

Ravindra-Jadeja-Featured-Img

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணி சோதனைகள் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களுக்கு முன்பு நடைபெறும் இதுபோன்ற போட்டிகளில் தான் இந்திய அணி சோதனை அடைப்படையில் சில முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது பற்றி அதிருப்தி தெரிவித்தனர். மேலும் பலர், இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 புள்ளிகளுடன் சமனில் உள்ளன. அந்த வகையில், கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. இரு அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) நடைபெறுகிறது. போட்டிக்கு முந்தைய உரையாடலின் போது பேசிய ரவீந்திர ஜடேஜா கூறியதாவது..,

Ravindra-Jadeja

Ravindra-Jadeja

“ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் கடைசி தொடர் இது மட்டும் தான். இங்கு மட்டும் தான் மாற்றங்களை ஏற்படுத்தி, சோதனைகளை செய்து பார்க்க முடியும். ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள முடியாது.”

முந்தைய போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, “வித்தியாசமான பேட்டிங் ஆர்டர்களை சோதனை செய்து பார்க்க இதுவே தக்க தருணம் என்ற காரணத்தால் தான், வித்தியாசமான மாற்றங்களை சோதனை செய்தோம்,” என்று பதில் அளித்தார்.

“அது நிர்வாகம் எடுக்கக்கூடிய முடிவு, கேப்டனுக்கு எந்த கூட்டணியுடன் விளையாட வேண்டும் என்று தெரியும், அந்த வகையில் இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் வேண்டாம். வித்தியாசமான கூட்டணி காரணமாக நாங்கள் தோல்வி அடையவில்லை. கிரிக்கெட்டில் சமயங்களில் நாம் சிலவற்றை சோதித்து பார்ப்போம். ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்து இரண்டாவது பாதியின் போது விக்கெட் சூழல் அடியோடு மாறியது. ஒரு தோல்வி அதிக குழப்பம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தி விடாது.”

Jadeja-Ind-Team

Jadeja-Ind-Team

“தனிப்பட்ட முறையில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியும் உங்களுக்கு எதேனும் விஷயத்தை கற்றுக் கொடுக்கும். ஆனால், அணியில் புதிய வீரர் இருக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், அதனை நான் நிச்சயமாக செய்வேன். இது அணியாக விளையாட வேண்டிய விளையாட்டு.”

“வெஸ்ட் இன்டீஸ் அணி மிகவும் இளமை மிக்க ஒன்றாக இருக்கிறது. அவர்கள் கற்றுக் கொண்டு வருகிறார்கள், அவர்கள் சிறப்பாக மாறி வருகின்றனர். அதிக போட்டிகளில் விளையாடும் போது, அவர்கள் இன்னும் சிறப்பாக மாறுவார்கள். அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. அவர்கள் இந்திய அணியிடம் இருந்து கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.”

“ஒவ்வொரு வீரரும் கடுமையாக உழைக்கின்றனர். யாரும் எதையும்எளிதில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் போது, அவர்கள் அதனை 100 சதவீதம் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற கேள்விகள் இந்திய அணி தோல்வியை தழுவும் போது மட்டுமே எழுகிறது. யாரும் இங்கு திமிராக செயல்படுவதில்லை,” என்று தெரிவித்தார்.

google news