மேஜர் கிரிக்கெட் லீக் (எம்.எல்.சி.) தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகான் மற்றும் சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அரங்கேறிய விசித்திரமான ரன் அவுட் பற்றிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
போட்டி துவங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த சான் பிரான்சிஸ்கோ யுனிகான் அணியின் ஃபின் ஆலென் 9 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களை விளாசி இருந்தார். பிறகு, நான்காவது ஓவரில், சீட்டில் ஆர்கஸ் அணியின் கேமரூன் கனோன் வீசிய பந்தில் ரன் எடுக்க முயன்றார் ஆலென்.
பந்து மெதுவாக உருண்டு செல்வதை பார்த்து, தானும் மெதுவாகி ஓடி சிங்கில் எடுக்க நினைத்தார் ஆலென். எல்லை கோட்டை கடப்பதற்குள், ஆலெனின் பேட் தடுக்கி, அவரின் கையில் இருந்து நழுவி கீழே விழ, நிலை தடுமாறினார். ஷாட் மிட்-விக்கெட் ஃபீல்டராக ஷேஹன் ஜெயசூரியா நிலமையை கண்டு சுதாரித்துக் கொண்டு விரைந்து செயல்பட்டு பந்தை, ஸ்டெம்ப்-ஐ நோக்கி வீசினார். பந்து கன நொடியில் ஸ்டெம்ப்-களை பதம் பார்த்தது.
இதையடுத்து ஆலென் ரன்-அவுட் ஆகி பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். மெத்தன போக்கால் ரன் அவுட் ஆன சம்பவம் அரங்கம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இவரின் மோசமான ரன்-அவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சீட்டில் ஆர்கஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்திலேயே குயின்டன் டி காக் விக்கெட்-ஐ பறிக்கொடுத்து தடுமாறியது சீட்டில் ஆர்கஸ் அணி. இதன் பிறகு ஜோடி சேர்ந்த நுமன் அன்வர் மற்றும் ஷேஹன் ஜெயசூரியா ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இந்த ஜோடி முதல் பவர்பிளேவின் போது 50 ரன்களை கடந்தது.
இதன் பிறகு சில விக்கெட்கள் சரிந்த நிலையிலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சீட்டில் ஆர்கஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ யுனிகான் அணி 18 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை கிளாசென் வென்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…