Connect with us

Finance

உஷாரய்யா உஷாரு..யூபிஐ பயன்படுத்துறீங்களா?.. அதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிகோங்க..

Published

on

upi apps

இன்று நாம் பண பரிமாற்றத்திற்கு என பல வகை யூபிஐ செயலிகள் உள்ளன. இவைகளை நாம் பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். நாம் இந்த செயலிகளை பயன்படுத்துவதில் ஏதேனும் கவனக் குறைவாக இருந்தால் இதன் மூலம் நாம் பணத்தினை இழக்கவும் நேரிடும். எனவே இந்த வகையான செயலிகளை உபயோகிக்கும் முன் கீழ்காணும் சில முன்னெச்சரிக்கைகளை செய்வது மிகவும் அவசியமாகும்.

beware of frauds and hackers

beware of frauds and hackers

1.UPI PIN-களை பாதுகாப்பாக வைத்தல்:

யூபிஐ PIN  என்பது நமது ஒவ்வொரு பறிமாற்றத்திற்கும் நாம் உபயோகிக்க கூடிய 4 இலக்க எண்ணாகும். இதனை மற்றவர்கள் அறியும் வகையில் வைக்காமல் இருத்தல் முக்கியமானதாகும். ஏனெனில் உங்களின் அந்த எண்ணை அறித்தவர்கள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க முயலலாம்.

2.அதிகாரப்பூர்வை UPI செயலிகளை பயன்படுத்துதல்:

ஒவ்வொரு வங்கியினாலும் அரசினாலும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.

3.பணம் செலுத்துபவர் பற்றிய தகவல்களை உறுதி செய்தல்:

நாம் ஒவ்வொரு பண பரிமாற்றத்தின் போதும் நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.பணத்தினை சரிபார்த்தல்:

நாம் அனுப்பும் பணத்தினை அனுப்புவதற்கு முன் சரியான தொகையை தட்டச்சு செய்துள்ளோமா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு 0 மிகுதியாக வந்தால் கூட நாம் நமது பணத்தினை இழக்க நேரிடலாம்.

5.பணபரிமாற்றத்திற்கான ஆதாரத்தினை வைத்து கொள்ளுதல்:

ஒவ்வொரு பணபறிமாற்றத்தின் போதும் அதற்கான ஆவணத்தை வைத்து கொள்ள வேண்டும்.

6.வங்கி ஸ்டேட்மெண்டை கண்காணிப்பது:

அவ்வப்போது நமது வங்கி கணக்கினையும் அதன் மாத ஸ்டேட்மெண்டையும் கண்காணித்து கொள்ள வேண்டும்.

மேலும் நமது யூபிஐ செயலிக்கென்று உள்ள லாக் வசதியினை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் நமது கணக்கில் உள்ள பணத்தினை பாதுகாத்து கொள்ளலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *