Connect with us

latest news

2ஜிபிக்களுக்கு மேல் டேட்டாவை அள்ளி கொடுக்கும் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் நிறுவனங்கள்.. எது பெஸ்ட்னு பார்க்கலாமா?

Published

on

airtel jio vi offers comparison

கடந்த சில வருடங்களாக இண்டெர்நெட் உபயோகிப்பவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய கருத்துகனிப்பின்படி உபயோகிப்பாளர்கள் மாதத்திற்கு 100 பில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் அதிக அளவில் வீடியோ, கேம்ஸ், பாடல் கேட்பவராக இருந்தால் இந்த திட்டமானது உங்களுக்கு மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும். இப்படியான திட்டங்களை எந்த நிறுவனம் எந்த விதமான சலுகைகளுடன் தருகிறது என்பத பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ:

jio

ஜியோ நிறுவனம் 2.5ஜிபி வரையிலும் டேட்டாவை தரும்படி மூன்று ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் அனைத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ், ஜியோ டி.வி ஜியோ சினிமா போன்ற வசதிகளை பயன்படுத்த முடியும். ஜியோவின் ரூ349 திட்டம் 30 நாள் வேலிடிட்டியுடனும், ரூ. 899க்கான திட்டம் 90 நாள் வேலிடிட்டியுடனும், ரூ. 2,023 திட்டம் 252 நாள் வேலிடிட்டியுடனும் வருகிறது.

ஏர்டெல்:

Airtel-5G-Plus

ஏர்டெலில் 2.5ஜிபி முதல் 3ஜிபி வரை ஏராளமான சலுகைகளையும் நாம் அனுபவிக்கலாம்.இந்த திட்டங்கள் அனைத்துமே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும், ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ்களையும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும், 3 மாதத்திற்கான அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப்பையும், இலவச ஹலோ டியூனையும், விங்க் மியூசிக் மற்றும் 28 நாட்கள் வரையிலும் ஏர்டெல் எக்ஸ்டிரிம் செயலியை உபயோகப்படுத்தும் வசதியையும் அளிக்கிறது.

இதன் ரூ. 999 திட்டம் 82 நாட்கள் வேலிடிட்டியுடன் நாளுக்கு 2.5ஜிபி டேட்டாவையும் மற்றும் 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பையும் தருகிறது. இதன் ரூ. 3359க்கான திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் ஒரு நாளுக்கு 2.5ஜிபி டேட்டாவையும் தருகிறது. மேலும் ஒரு வருடத்திற்கான டிஸ்டினி+ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப்பையும் தருகிறது.

ரூ. 399 க்கான திட்டம் நாளுக்கு 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கும் ரூ. 499 திட்டம் 3ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கும் மற்றும் 3 மாதத்திற்கான டிஸ்டினி+ஹார்ஸ்டாரை பயன்படுத்தும் அக்சஸையும் தருகிறது.

வோடஃபோன் ஐடியா:

vi prepaid plans

vi prepaid plans

இதன் ரூ.399 திட்டம் ஒரு நாளுக்கு 2.5ஜிபி டேட்டாவையும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதியையும் 28 நாட்களுக்கு தருகிறது. 2.5ஜிபிக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.359க்கான திட்டம் ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டாவையும் நாளுக்கு 100எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்கால் போன்ற பல்வேறு சலுகைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.699க்கான திட்டம் மேற்கூறிய சலுகைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையில் பல பயனுள்ள திட்டங்களை நமக்கு அளிக்கின்றன. இதில் நமக்கு எது தேவைப்படும் விதமாக உள்ளதோ அதனை நாம் உபயோகப்படுத்தலாம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *