Connect with us

Finance

சரிவை சந்தித்த தங்கம் விலை…வீழ்ச்சியடைந்த வெள்ளியின் விலையும்…

Published

on

Jewel

செப்டம்பர் மாதமான இந்த மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் நிலையில்லாத தன்மை தொடர்தே வருகிறது. ஒரு நாள் விலை உயர்வையும், பல நேரங்களில் வீழ்ச்சியையும் கண்டு வருகிறது இதன் விற்பனை விலை. சென்னையில் விற்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் நேற்றை விட இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவே இது அமைந்துள்ளது.

சென்னையில் நேற்று இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ஆராயிரத்து என்னூற்றி என்பது ரூபாய்க்கும் (ரூ.6,880/-) , ஒரு சவரன் ஐம்பத்தி ஐந்தாயிரத்து நாற்பது  ரூபாய்க்கும் (ரூ.55,040/-) விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

gold Jewel

gold Jewel

சவரன் ஒன்றிற்கு இன்று நூற்றி இருபது ரூபாய் குறைந்து (ரூ.120/-) ஐம்பத்தி நாலாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ.54,920/-) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை  ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6,865/-) விற்பனையாகி வருகிறது.நேற்று ஒரு சவரன் ஐம்பத்தி ஐயாயிரத்து நாற்பது (ரூ.55,040/-).ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

தங்கத்தின் விலையைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் இன்று சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராம் ஒன்று தொன்னூற்றி எட்டு ரூபாய்க்கு (ரூ.98/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.97/-) விற்கப்படுகிறது.

இதனால் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.97,000/-) விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாத போதிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது ஆபரணப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

google news