Categories: indialatest news

சென்னைய சூழப் போகுதாமே கடல் தண்ணி?…இப்பவே பதற வேண்டாம் இத எண்ணி…

கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களின் சிறு பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியின் முடிவுகள் சொல்லியருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்து நாற்பதாம் ஆண்டுக்குள் சென்னயின் நிலப்பரப்பில் ஏழு சதவீதம் வரை கடல் நீரால் சூழப்பட்டு மூழ்கி விடும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவலையும் இந்த ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது.

கடல் மட்டம் உயருவதால் ஏற்படும் அபாயம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆய்வு செய்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடல் மட்டம் உயருவதால் சென்னை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் உள்ளிட்ட பதினைந்து இந்தியாவின் முக்கிய நகரங்கள் கடல் நீர் சூழ்ந்து. மூழ்கடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

Chennai Sea Shore

கடல் மட்டம் உயருவதால் 2040ம்ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய ஏழு சதவீதம் ழூழ்கி விடும் என்றும், கடந்த `1987ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரி சென்னையில் நீர் மட்டம் ஆறு புள்ளி ஏழு ஒன்பது மில்லி மீட்டர் வரை உயர்ந்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், மைலாப்பூரில் அமைந்துள்ள தமிழ் நாடு அரசின் நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் நீர் மட்டத்தின் உயர்வை கடல் சந்திக்கப்போவதனால் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய மண்டலங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

இதே போல 2040ம் ஆண்டு சென்னையின் 7.29 சதவீத பகுதி கடலில் மூழ்கிவிடும் என்றும், 2060ம் ஆண்டிற்குள் 9.65 சதவீதம் கடல் நீரால் மூழ்கடிக்கப்படும் எனவும் தொழில் நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டதன் முடிவுகளைப் பற்றி சொல்லியிருக்கிறது.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago