இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்க உள்ளது ஒலிம்பிக் போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்படும். உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று வருகிறது.
நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வளர்த்துக் கொள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒரு காரணியாக இருக்கும் என்ற நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதும். பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்களும் இந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை காட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் பிரச்சனைகளில் உலக நாடுகளும், ஐ.நாவும் தலையிட்டு வருகிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருந்து வருவது உலகறிந்ததே. இப்படிப்பட்ட நேரத்தில் தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்க பாலஸ்தீன் கோரிக்கை வைத்துள்ள்து.
இந்நிலையில் பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல என்றும் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டி, மற்ற ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும், வாய்ப்புகளையும் அனுபவித்து வருகிறது என சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாம்ஸ் பாக் சொல்லி பாலஸ்தீனின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதனால் இஸ்ரேல் வீரர்கள் நாளை மறு நாள் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் இருக்காது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…