latest news
அர்ஜன்ஸி காட்டாத அர்ஜென்டினா…எதிர்பாராத முடிவை கொடுத்த கால் பந்து போட்டி…
உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளையாட்டாக இருந்து வருவது கால்பந்து. கிரிக்கெட் போட்டி கூட இப்போது தான் உலகம் முழுவதும் தெரியத் துவங்கி வருகிறது, ஆனால் உலக விளையாட்டுகளில் பல்வேறு தரப்பினரின் விருப்பமானதாக இருப்பதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது கால்பந்து.
உள்ளூர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கும் போது கூட நொடிக்கு நொடி பரபரப்பானதாகவே இருக்கும். இந்த விளையாட்டினுடைய சிறப்பம்சமாக பார்க்கப் படக்கூடியது இந்த பரபரப்பும் கூடவே தான். கிளப் அணிகள் உருவாக்கப்பட்டு, அதில் சாம்பியன் கோப்பைகள் தொடர்களும் நடத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் கிளப் போட்டிகளில் கூட சர்வதேச கால்பந்து வீரர்கள் விளையாடி அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வருகின்றனர். சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கால் பந்து விளையாட்டின் உலக சாம்பியன்ஸ்களுக்கான தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் ரேட்டிங்கில் முந்தி நிற்கும் இந்த விளையாட்டின் உலகக் கோப்பை ஆட்டங்கள் உலகத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரேஸில், அர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, போர்ச்சுகல் கால் பந்து அணிகள் உலக அளவிலான அணிகளில் பலம் கொண்ட வைகளாக பார்க்கப்ப்டுகிறது.
இருபத்தி மூன்றாவது கால்பந்து உலக்கோப்பை போட்டிகள் 2026ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் வைத்து நடத்தப்பட இருக்கிறது.
மொத்தம் நாற்பத்தி எட்டு அணிகள் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. போட்டிகளை நடத்தும் நாட்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் மூலமே தேர்வு செய்யப்படுகிறது. கண்டங்கள் வாரியான அணிகளும் தேர்வு செய்யப்படும் நிலையில் இதன் தகுதி சுற்று போட்டிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
அர்ஜென்டினா – வெனிசுலா அணிகள் மோதிய தென் அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றுப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்த இந்த போட்டியில் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதிகள் ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைத்தது.
அர்ஜென்டினா அணியின் நிக்கோலஸ் ஒட்டமென்டி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் அந்த அணியை கோல் அடிக்க விடாமல் அரணாக மாறி தடுப்பாட்டத்தை மேற்கொண்டனர் வெனிசுலா அணியினர்.
வெனிசுலா அணிக்கான முதல் கோலை அந்த அணி வீரர் சாலமன் ரேண்டன் அடித்தார். இறுதி வரை இந்த இரண்டு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் இல்லை என்ற விதத்திலேயே மோதி வந்தனர்.
இரண்டாவது பாதியிலாவது அர்ஜென்டினா அணி வீரர்கள் வேகத்தை அதிகரித்து அடுத்த கோலை அடிப்பார்கள் என ஆட்டத்தை பார்த்த அந்நாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெனிசுலா நாட்டு அணியினர் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை இறுதி வரை.
இதனால் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் அர்ஜென்டினா -வெனிசுலா அணிகளுக்கு இடையேயான இந்த தகுதி சுற்று போட்டிடிராவில் முடிவடைந்தது.