கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கோரமான கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார். டெல்லியில் இருந்து ரூர்க்கி சென்று கொண்டிருந்த போது, ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். கடந்த டிசம்பர் 2022 முதல் ரிஷப் பந்த் தீவிர சிகிச்சை பெற்றும், விபத்துக்கு பிறகு உடலை தயார்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தனது செயல்பாடுகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை ரிஷப் பந்த் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரிஷப் பந்த் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட வீடியோவில், அவர் எளிதில் பளு தூக்குதலில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவுடன், “நீங்கள் நினைப்பதை விட, நீங்கள் வேலை செய்வதற்கான பலன்களை உங்களுக்கு கிடைக்கும்,” (You get what you work for, not what you wish for) என்று தலைப்பிட்டிருந்தார்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பை நிர்வகித்து வரும் ஷியாம் ஷர்மா மற்றும் ஹரிஷ் சிங்லா ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த்-ஐ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரிஷப் பந்த் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மெல்ல பயிற்சியை துவங்க ஆயத்தமாகி வருகிறார்.
விபத்துக்கு பின் மீண்டும் தன்னை தயார்படுத்திக் கொள்வதில் ரிஷப் பந்த் அதிவேகமாகவும், உறுதியுடனும் செயல்பட்டு வருகிறார். இவரது ரசிகர்கள் ரிஷப் பந்த் விரைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மீண்டும் பழைய படி கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
ரிஷப் பந்த் விரைந்து மீண்டு வருகிறார், விரைவில் அவர் களத்திற்கு திரும்புவார் என்று ஷியாம் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். “மீண்டு வரும் முயற்சிகளில் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் எப்போது கம்பேக் கொடுப்பார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது, ஆனால் இதற்கு அதிக நேரம் தேவைப்படும். அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்,” என ஷியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…