டி20 உலக கோப்பையில் காயம் ஏற்பட்டது போல் தான் நடித்ததாக ரிசர்வ் பண்ட் பேசியிருக்கின்றார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வெற்றியை ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
இறுதிப் போட்டியின் முக்கிய கட்டத்தில் ரிசர்வ் பண்டிற்கு காயம் ஏற்பட்டு ஆட்டம் தடைப்பட்டது. அந்த தாமதம் இந்தியாவிற்கு மிக சாதகமாக அமைந்தது. இது குறித்து ரோகித் சர்மா தெரிவித்திருந்ததாவது: ‘தென்னாபிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் ரிசர்வ் பண்ட் தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தார்.
காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் சற்று மெதுவாகியது. இந்த சம்பவத்திற்கு பிறகு சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலையே கிளாசன் அவுட் ஆகினார். அதனால் அணிக்கு பதற்றம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தார்கள். இதனால் ஆட்டமானது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
ரிசர்வ் பண்டின் புத்திசாலித்தனம் தான் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது’ என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பாக ரிசர்வ் பண்ட் பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது ‘நான் என் பிசியோவிடம் முடிந்தவரை நேரம் கடத்த சொல்லி கேட்டு கொண்டேன்.
சிறிது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் உன் முழங்கால் நன்றாக உள்ளதா? என்று கேட்டார். அதெல்லாம் நன்றாக உள்ளது, நான் சும்மா நடிக்கின்றேன்’ என்று அவரிடம் கூறியதாக தெரிவித்திருக்கின்றார். இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…