இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. மழை மற்றும் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (செப்டம்பர் 30) காலை துவங்கியது. இன்றைய ஆட்டத்தின் துவக்கத்திலேயே மேஜிக் செய்த பும்ரா வங்கதேசம் அணியின் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
அந்த வரிசையில், வங்கதேசம் அணியின் ஐந்தாவது விக்கெட்டாக லிட்டன் தாஸ்-ஐ முகமது சிராஜ் கைப்பற்றினார். ஆனால், இந்த விக்கெட் ரோகித் சர்மாவின் துரித செயல்பாட்டால் மட்டுமே சாத்தியமானது. குறிப்பிட்ட பந்தை சிராஜ் வீசும் போது 30-யார்டு வட்டத்தில் ரோகித் சர்மா நின்றுக் கொண்டிருந்தார். பந்து உற்று நோக்கிய லிட்டன் தாஸ் அதனை ஓங்கி அடிக்க முயன்றார்.
எனினும், அவரது டைமிங் மிஸ் ஆக லிட்டன் தாஸ் அடித்த பந்து நேரடியாக ரோகித் சர்மாவின் தலைக்கு மேல் சென்றது. இதனை சரியாக சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா தரையில் இருந்து ஒற்றை ஜம்ப் செய்து ஒரே கையில் பந்தை லாவகமாக பிடித்துக் கொள்ள களத்தில் இருந்த இந்திய வீரர்கள், பந்தை அடித்த லிட்டன் தாஸ் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியில் அந்த கேட்ச் விக்கெட்டாக மாற லிட்டன் தாஸ் நடையை கட்டினார்.
ரோகித் சர்மா தரையில் இருந்து காற்றில் மிதந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் ஆட்டம் கூட மீதியில்லாத சூழலில், இந்திய அணி இந்த போட்டியில் முடிவை எதிர்நோக்கி விளையாடி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…