ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தன்னால் விளையாட முடியாது என்று ரோகித் ஷர்மா கூறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சமீபத்தில் இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. 2012 க்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 18 தொடர்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நியூசிலாந்து அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட போட்டிகள் என 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியும். 6-ல் 4 வெற்றிகளை பெறாமல் அதற்கும் குறைவான வெற்றிகளை பெற்றால், மற்ற அணியின் தோல்வியை பொறுத்து இந்தியா பைனலுக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரிய வரும்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி இருக்கின்றது. சொந்த காரணங்களால் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் ரோகித் சர்மா பயணம் செய்ய மாட்டார் எனவும், இரண்டாவது அல்லது மூன்றாவது டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பு அவர் இந்திய அணியில் இணைந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆஸ்திரேலியா தொடர் மிக முக்கியம் என்பதால் முதல் போட்டியில் இருந்து நீங்கள் விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மாவிடம் தொடர்ந்து பிசிசிஐ கோரிக்கை வைத்திருக்கின்றது. இது குறித்து தான் வீட்டிற்கு சென்று முடிவை தெரிவிக்கின்றேன் என்று கூறிவிட்டு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடனே ரோகித் சர்மா வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய அணியில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிசிசிக்கு பதில் அனுப்பியுள்ள ரோஹித் சர்மா என்னால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது. தனிப்பட்ட காரணங்களால் என்னால் விளையாட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்து இருப்பதாக கூறப்படுகின்றது
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…