இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்-இல் ரோகித் ஷர்மா தனது வின்டேஜ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 143 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். இதில் ஒன்பது பவுன்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். 443 முறை களம் கண்ட ரோகித் ஷர்மா இதுவரை 17 ஆயிரத்து 298 ரன்களை குவித்துள்ளார். இதில் சராசரி 42.92 ஆகும். 463 இன்னிங்ஸ்-இல் ரோகித் ஷர்மா 44 சதங்களையும், 91 அரைசதங்களையும் அடித்திருக்கிறார். இவரது சிறந்த ல்கோர் 264 ரன்கள் ஆகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலி (421 போட்டிகளில் 18 ஆயிரத்து 433 ரன்கள்), ராகுல் டிராவிட் (504 போட்டிகளில் 24 ஆயிரத்து 064 ரன்கள்), விராட் கோலி (500 போட்டிகளில் 25 ஆயிரத்து 484 ரன்கள்) மற்றும் சச்சின் டென்டுல்கர் (664 போட்டிகளில் 34 ஆயிரத்து 357 ரன்கள்) குவித்துள்ளனர்.
புதிய மைல்கல் மூலம் ரோகித் ஷர்மா மகேந்திர சிங் டோனியை முந்தியிருக்கிறார். எம்.எஸ். டோனி 535 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்து 092 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 சதங்கள், 108 அரை சதங்களும் அடங்கும். இவரது அதிகபட்ச ரன்கள் 224 ஆகும்.
இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா இந்தியாவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 620 ரன்களை குவித்துள்ளார். இவரது சராதரி 46.41 சதவீதம் ஆகும். இதில் பத்து சதங்கள், 15 அரை சதங்கள் அடங்கும். சிறப்பான ஸ்கோர் 212 ரன்கள் ஆகும்.
243 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரோகித் ஷர்மா 48.63 சராசரியுடன் ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 825 ரன்களை குவித்துள்ளார். இதில் 30 சதங்களும், 48 அரைசதங்களும் அடங்கும். இவரது சிறந்த இன்னிங்ஸ் 264 ரன்களை விளாசி இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…