ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்து கௌரவப்படுத்தி இருக்கின்றார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான 22 வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யா மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலமாக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். பின்னர் ரஷ்யா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடியை காரில் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின் இரவு விருந்து ஒன்றை வழங்கி இருந்தார். இதற்கிடையே மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் நரேந்திர மோடி இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வணிகம், எரிபொருள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக பல ஆலோசனைகள் மற்றும் பணியாற்ற பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டது.
இந்நிலையில்ரஷ்யாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதினை அதிபர் புதன் பிரதமர் மோடிக்கு அளித்து கவுரவித்தார். இந்த உயரிய விருதை இந்திய மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் என்று பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…